பக்த கோடிகளே ! மெய் அன்பர்களே !
Generalவங்கக் கடற் கரையில் அறம் வளர்க்கும் மாநகராம் “தொண்டை வளநாடு சான்றோருடைத்து”, என்று ஒளவைப் பிராட்டியால் சிறப்பிக்கப்பட்ட தருமமிகு சென்னையில் வளசரவாக்கத்தில் வேண்டுவோர்க்கு வேண்டிய வரங்களை அள்ளித் தருபவரும் சங்கடங்களை நீக்கிச் சகல நன்மைகளைத் தருபவரும் சுயம்பு மூர்த்தி என்ற அற்புதத்தைக் கொண்டவரும் குபேர திசை நோக்கி அமர்ந்து தன, தான்ய பிராப்திகளை அளிப்பவரும், அரச மரத்தை ஸ்தல விருட்சமாகக் கொண்டு திருமணம், குழந்தை பாக்கியம், உத்யோகம் மற்றும் உத்யோக உயர்வு போன்ற பிராப்திகளைத் தருபவரும், குளக்கரை கணபதி, குரு பார்த்த கணபதி என்ற சிறப்பையும் பெற்றுப் பக்தர்கள் அனைவருக்கும் அருள்பாலித்து வரும் முழுமுதற் கடவுளாம் சுயம்பு ஸ்ரீ சக்தி விநாயகப் பெருமானுடைய ஆலயத் திருப்பணிகள் நிறைவுற்று மஹா கும்பாபிஷேக விழாவானது நிகழும் மங்களகரமான சோபகிருது ஆண்டு பங்குனி மாதம் 11ஆம் தேதி (24-03-2024) ஞாயிற்றுக்கிழமை சுக்லபக்ஷம் சதுர்தசி, உத்திர நட்சத்திரம், அமிர்தயோகம் கூடிய சுபயோக சுபதினத்தில், காலை 9.00 மணிக்குமேல் 10.30 மணிக்குள் ரிஷப லக்கினத்தில் கீழ்கண்ட நிகழ்ச்சி நிரல்படி வேத ஆகம முறைப்படி மஹா கும்பாபிஷேகம் நடைபெற இருப்பதால் பக்தகோடிகள் தங்களால் இயன்ற பொருள் மற்றும் நிதி உதவி அளித்து மஹா கும்பாபிஷேகத்தை சிறப்பாகத் தரிசித்து இம்மையிலும் மறுமையிலும் நீங்காத செல்வம் பெற்று சகல சௌபாக்கியத்துடனும் லஷ்மி கடாக்ஷத்துடனும் வாழ்வாங்கு வாழ வேண்டி இறைவனை வேண்டுகின்றோம்.
